July 14, 2025
தட்டச்சு ஒலியை வைத்தே உங்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு..!
தொழில் நுட்பம்

தட்டச்சு ஒலியை வைத்தே உங்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு..!

Jun 21, 2024

நீங்கள் தட்டச்சு செய்யும் ஒலியை வைத்தே நீங்கள் என்னென்ன தட்டச்சு செய்கிறீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிய தொழில்நுட்ப அல்காரிதம் ஒன்றை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனடிப்படையில் கணினியின் தட்டச்சுப் பலகையில் நீங்கள் என்ன தட்டச்சு செய்தாலும் அதன் ஒலியை வைத்தே நீங்கள் என்ன தட்டச்சு செய்கிறீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்து விடும்.

இது குறித்து ஆய்வு செய்த இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒலிவாங்கி மூலம் பெறப்படும் ஒலியை வைத்தே 95 விழுக்காடு அளவு சரியான விவரங்களை இது சேகரித்து விடும் என்று கூறியுள்ளனர்.

இதை எளிதாக செயல்படுத்தலாம் என்பதால், இக்கண்டுபிடிப்பு சில அறிவியலாளர்களுக்கு கவலையளிப்பதாக கூறப்படுகிறது.

ஒருவருக்கு அருகிலிருந்தே இதை செயல்படுத்தலாம் என்றும், ஒரே அறையில் இருக்கும் இன்னொருவரின் தட்டச்சு ஒலியை பதிவு செய்ய திறன் பேசியே (smartphone) போதும் என்றும் கூறுகின்றனர்.

அந்த தட்டச்சு ஒலியின் குறியீடுகளை கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு, அதை எழுத்துக்களாக மாற்றிக் கொடுக்கும்.

அந்த ஒலிகளை வைத்து ஒருவரின் ரகசிய தகவல்களான பாஸ்வேர்டுகள், வங்கி ரகசிய எண்கள், தனிப்பட்ட உரையாடல்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க இயலும்.

பயனர்களின் தனிப்பட்ட ரகசியங்களை கண்டறிய விஞ்ஞானிகள் இதை கண்டுபிடிக்கவில்லை மாறாக பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்காகவே இதை கண்டுபிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இது போன்று உளவறிவதை தவிர்க்க, தட்டச்சு செய்யும்போது வெவ்வேறு விதமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதோடு, தட்டச்சு செய்யும்போது விதவிதமான ஒலிகளை எழுப்பும் செயலிகளையும் கணினியில் நிறுவுமாறு அறிவுறுத்துகின்றனர்.

ரகசிய குறியீடுகள், பாஸ்வேர்டுகள், இரண்டடுக்கு தகவலுறுதி முறை (security keys, two-step authentication and a password manager) போன்றவற்றையும் பரிந்துரைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *