அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஒன்றை செலுத்திய பேருந்து சாரதி எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே, இவ்வாறு ரயில் தண்டவாளத்தில் பேருந்தை செலுத்தியுள்ளார்.
புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து செல்லும் நோக்கில், பேருந்தின் சாரதி, பேருந்தை ரயில் தண்டவாளத்தில் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தையும் பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.