கொழும்பின் புறகரான கடவல – திவுலப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்த தந்தையின் கழுத்தை ஆசையாய் அவரது மகள் கட்டியணைத்ததால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததோடு தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தை, தனது பாட்டியுடன் முச்சக்கரவண்டியின் பின்புறம் அமர்ந்து சென்றுள்ளது.
திடீரென முச்சக்கரவண்டியை செலுத்திக்கொண்டிருந்த போது திவுலப்பிட்டி கடை பகுதியில் வைத்து தந்தையால் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளார்.
தந்தையின் கழுத்தை சிறுமி இறுக கட்டிப்பிடித்தமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சாலையில் இருந்து விலகி முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது, சிறுமி முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.