கணவரின் தொல்லையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆத்திரத்தில் தனது தந்தையின் தலையில் கல்லைப்போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தாவண்கெரே மாவட்டம், ஜகலுரு தாலுகா லக்கிம்புரா கிராமத்தில் வசிக்கும் திப்பம்மா (52)என்றவர் கணவரின் தொல்லையால் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் தந்தை அஞ்சனப்பா கட்டுமான வேலையில் ஈடுபட்டு வருகின்றார். அத்துடன் மதுவுக்கு அடிமையான அஞ்சனப்பா, அன்றாடம் மதுபோதையில் வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று வழக்கம் போல தனது மனைவி திப்பம்மாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த திப்பம்மா, தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார்.
தன் தாய் உயிர்மாய்ப்பு செய்து கொண்ட செய்தி அறிந்த மகன் ரமேஷ், வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை அஞ்சனப்பா நன்றாக உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றார் . தன் தாய் தற்கொலைக்கு காரணமான தந்தை நன்றாக உறங்குவதைக் கண்ட ரமேஷ் கடும் கோபம் கொண்டு .
அங்கு கிடந்த கல்லை அஞ்சனப்பாவின் தலையில் போட்டுள்ளார் இதனால் அஞ்சனப்பாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட திப்பம்மா, கொலை செய்யப்பட்ட அஞ்சனப்பா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
தந்தையை கொலை செய்த ரமேஷை பொலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒருவரின் குடிப்பழக்கம் இருவரின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.