November 13, 2025
தந்தையை கோடரியால் வெட்டி படுகொலை செய்த மகன்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

தந்தையை கோடரியால் வெட்டி படுகொலை செய்த மகன்..!

Feb 26, 2024

மனநலம் குன்றிய தனது மகனுக்கு மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தை ஒருவரை நோயுற்ற மகன் கோடரியால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

பிடிகல, களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த பியதாச ஜயசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய மகனை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் மகன் அங்கொட மனநல வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் குறித்த நபரை பெற்றோரிடம் ஒப்படைத்த வைத்தியர்கள் அவருக்கு தினந்தோறும் மருந்து வழங்குமாறு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *