தெற்கு ஐரோப்பாவின் – மோல்டாவில் தனது நண்பியை தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 32 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் சம்மதம் இல்லாமல் அச்சுறுத்தி தொலைத்தொடர்பு சாதனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு இலங்கையர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
எனினும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தற்போதுவரை நீதிமன்றில் சாட்சியமளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவரை பிணையில் அனுமதிப்பது சாத்திமில்லாத ஒன்று என அந்த நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே அவர் பிணைக்கு பின்னர் தலைமறைவானால், அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்து வர வழி இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து பிணைக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.