2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தற்போது கூறுகின்ற சில கூற்றுக்கள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான பிரச்சினை நீதிமன்றில் ஆராயப்பட்டு வருவதாகவும், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், கட்சித் தலைவருக்கு முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருப்பதாகவும், அதன் மூலம் மற்ற கட்சிப் பிரதிநிதிகளின் தீர்மானங்கள் மற்றும் நியமனங்கள் செல்லுபடியாகாது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவை வழங்கவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியான கூற்றுக்களை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.