நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது.
முதலாது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Captitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் க்ளத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக 1 விக்கட்டையும், 39 ஓட்டங்களையும் பெற்ற மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) வீரர் ரொமாரியோ செப்ஃபர்ட் (Romario Shepherd) தெரிவாகியிருந்தார்.