November 18, 2025
தனது 35வது பிறந்த நாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்!
சினிமா புதிய செய்திகள்

தனது 35வது பிறந்த நாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்!

Oct 16, 2025

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

முதல் படமே யாருமே எதிர்க்கொள்ளாத அளவிற்கு பெரிய பாராட்டை அவருக்கு தேடிக் கொடுத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற Y This Kolaveriடி பாடல் ஒரே இரவில் ஓபாமா அளவிற்கு பேமஸ் என்ற வசனம் போல் பிரபலம் அடைந்தார்.

அந்த படத்தில் தொடங்கிய அவரது பயணம் இப்போது வரை அனிருத் அனிருத் என இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தனது இசை மூலம் அசத்தி வருகிறார்.

இவரது சொத்து மதிப்பு

ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார், ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் தான் பாடும் எந்த ஒரு பாடலுக்கும் அவர் சம்பளமே வாங்குவது இல்லை.

இன்று அனிருத் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த சூழலில் சமூக வலைதளங்களில் அனிருத் சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது.

மொத்தமாக அனிருத்திற்கு ரூ. 70 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. படங்கள் இசையமைப்பது, கான்செர்ட், ஹோட்டல் தொழில் என பல வகையிலும் சம்பாதித்து வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *