December 13, 2025
தனியார் கல்வி நிலையத்தில்  மோதல்  ..!
News News Line Top Updates புதிய செய்திகள்

தனியார் கல்வி நிலையத்தில்  மோதல்  ..!

Mar 25, 2024

குருநாகல், இப்பாகமுவ பக்மீகொல்ல  பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்விப் பொதுத் தராதர சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வந்த நிலையில்  நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *