அவிசாவளை – கேகாலை வீதியில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.