தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருகின்றார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். அதே சமயம் ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகின்றார்.
தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே நடித்து இயக்கி வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
மேலும் ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புகள் இருப்பதாக இணையத்தில் தீயாய் தகவல்கள் பரவி வருகின்றன.
ஜூன் 13 ஆம் தேதி தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியானது.
ஆனால் தற்போது திடீரென இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று பரவிய வதந்தியால் தனுஷ் ரசிகர்கள் உச்சகட்ட சோகத்தில் இருக்கின்றனர்.
இந்த வதந்திகள் உண்மையாக இருக்கக்கூடாது என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ராயன் படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.
தற்போது ஜூன் மாதம் இப்படத்தை திரையில் பார்த்துவிடலாம் என காத்துக்கொண்டிருந்த தனுஷின் ரசிகர்களுக்கு இப்படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக வந்த செய்தி இடியாய் இறங்கியுள்ளது.
இது வெறும் வதந்தியாகவே மட்டும் இருக்கவேண்டும் என்பது தான் ஒவ்வொரு தனுஷ் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழு அல்லது தனுஷ் படத்தின் ரிலீஸ் திகதியை அதிகாரபூர்வமாக ஒரு போஸ்டரின் மூலம் வெளியிடவேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு ராயன் ரிலீஸ் தள்ளிப்போவதாக வந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.