Tamil News Channel

தன்னம்பிக்கையை வளர்க்கணுமா? அப்போ இந்த எளிய பழக்கங்களை கடைப்பிடிங்க..!

வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் முக்கியமில்லை தன்னம்பிக்கை ஒன்று போதும் என வாழ்வில் சாதித்தவர்கள் பலர் சொல்லியிருக்கின்றார்கள்.

இது நூறு சதவீதம் உண்மையான கருத்து, வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட நமது வாழ்க்கை நம் கையில் தான் இருக்கின்றது.

நாம் ஒத்துக்கொள்ளும் வரையில் எந்த தோல்வியும் நம்மை பாதிக்காது.நாம் நினைத்தால் எதை இழந்தாலும் அதை விட பெரிய விடயத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கை நமக்குள் இருந்தால் அதுவே தன்னம்பிக்கை.

சொல்லும் போது எளிமையாக இருந்தாலும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது சற்று கடினமான விடயம் தான். ஆனால் தன்னம்பிக்கை இல்லை என்றால் வெற்றி கிட்டவே வராது என்பது தான் உண்மை.

அப்படி வாழ்வில் வெற்றியடைய இன்றியமையாத தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள மிகவும் எளிமையாக வழிகள் என்னென்ன என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

தன்னம்பிக்கையை வளர்க்க எளிய வழிகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், முக்கியமாக மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்துவமான திறமைகள், குணங்கள், ஆளுமைகள் என்பன காணப்படுவதால், மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவது முற்றிலும் மன அழுத்தத்தை மட்டுமே கொடுக்கும்.

நீங்கள் படிக்கும் துறையை தெரிவு செய்வதானாலும் சரி, தொழில் துறையை தெரிவு செய்வதானாலும் சரி உங்களுக்கு எது பிடிக்குமோ, எதை உங்களால் சிறப்பாக செய்ய முடியுமோ அதை தெரிவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடித்தமான ஆடை அணிவதையும் ஆபரணங்கள் அணிவதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை முற்றிலும் விட்டுவிட்டுது உங்களின் தன்னம்பிக்கையை பெரிதும் அதிகரிக்க உதவும்.

ஒரு விடயத்தை செய்ய தொடங்கிய உடனேயே அதற்கான பலன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி வெற்றி என்பது தொடர் பயணம் அது இலக்கு அல்ல என்பதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சில விடயங்களுக்கு நடப்பதற்கு  நீண்ட பயணம் தேவைப்படும்.சோர்வின்றி தொடர்ந்து முயற்ச்சி செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.இது உங்கள் தன்னம்பிக்கையை பெரிதும் உயர்த்தும்.

எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடியும், எனக்கு நல்லதே நமக்கும் போன்ற வார்த்தைகளை பேசும் போது மட்டுமல்ல உங்களுக்குள் சிந்திக்கும் போதும் அடிக்கடி பாவிக்க வேண்டும்.

புத்தகம் படிப்பது, தன்னம்பிக்கையான பேச்சை கேட்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சிறந்த வழியாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts