காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் (11-07-2025) பயணித்த இரவு தபால் புகையிரதமானது, கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் விபத்திற்குள்ளாகியது.

இதில், புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கறுப்பையா ஐங்கரன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதுபோதையில் தடுமாறி விழுந்த நிலையில் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிக்கும் நிலையில், மேலும், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(கிளிநொச்சி நிருபர் ஆனந்தன் வனிதா)



