November 18, 2025
தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவில் திடீர் மாற்றம்
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவில் திடீர் மாற்றம்

Jan 19, 2024

தமிழ்த்தேசியத்தில் உறுதிக்கொண்ட தலைவர் ஒருவரை நியமிப்பதில் சுமந்திரனின் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதேசத்தில் இருக்கக்கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை தலைவர் தவராசா சர்ஜீன் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசியத்தின்பாலுள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் ஒருவரை நியமிப்பதிலே உறுப்பினர்கள் தீவிரமாக உள்ளனர்.

அந்த வகையில், வாக்கெடுப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை பொறுத்தமட்டில் தமிழ்தேசியத்தின்பாலுள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் சிறீதரன் அவர்களையே தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

கட்சி மீதான பல திட்டங்களை மையப்படுத்தியே தற்போது வாக்குகளை வழங்க தீர்மானித்துள்ளதுடன், சிறீதரன் அவர்களே சிறந்தவர் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிபர் சட்டத்தரணியாக சட்டத்துறையில் சிறந்து விளங்குபவர் சுமந்திரன்.

ஆனால் தற்போது அவர் தலைமை பதவிக்கு வருகின்றார் என்ற போது பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச சார்ந்த விடயங்களில் சுமந்திரன் அவர்கள் பல விடயங்களை கையாண்டுள்ளதுடன், அவருக்கு கட்சியில் உள்ள முக்கிய பதவிகளை வழங்க முடியுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை தலைவர் தவராசா சர்ஜீன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *