இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைப்பெற்றது.
சிறிதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும் சுமந்திரனுக்கு ஆதரவாக 137வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.