Tamil News Channel

தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!

தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது,

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. கூறியுள்ளாரே என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விக்னேஸ்வரன் என்பவர் அடிப்படைவாத நோக்கில் அரசியலை முன்னெடுப்பவர்.

அரசியலில் அவர் முதிர்ச்சியடைந்த நபரும் கிடையாது.

வடக்கு, கிழக்கில் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள் உள்ளதுடன் அவர்கள் இவ்வாறு முட்டாள்தனமாகக் கருத்துகளை முன்வைக்கமாட்டார்கள்.

மேலும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கில் எனக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 85 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

வடக்கு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு இருந்தது.

தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாதென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts