Tamil News Channel

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி; தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில்!

IMG-20240701-WA0096

இறந்த  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய இனத்தின் மிகப்பெரும் தலைவராக நீண்ட காலம் தமிழ் இனத்தை வழிநடத்திய பெருந்தலைவரை தமிழ்த்தேசிய இனம் இழந்துள்ளது.

மேலும் அவர் தெரிவிக்கையில் அவர் மூப்பின் காரணமா இறந்திருந்தாலும் தமிழர்களின் விடுதலைப்பயணத்தில் 1960ற்கு பின்பு சிறந்த பணிகளை ஆற்றிய சட்டத்தரணியும் எதிர்கட்சி தலைவரும் எமது கட்சியின் தலைவருமான சம்மந்தன் ஐயாவின் இழப்பு தமிழ்மக்களைப்பொறுத்த வரை காலத்தின் பேரிழப்பாகும்.

தொடர்ந்தும் அவருடைய இறப்பு நாளிலே அவருடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் கருத்தில் கொண்டு அவர் விட்டுச்செல்லும் பயணத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து எங்கள் தமிழ் மக்களுக்கான தேசிய அபிலாசைகளை தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான நீண்ட பயணத்தில் எங்களுடைய கரங்களை ஒன்றாக இணைத்து பயணிப்பதே நாங்கள் அவருக்கு செய்யும் பணியாக மாறும் அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தில் உதித்த ஒரு மனிதனாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து வடகிழக்கு இணைப்புக்கு  மூலகாரணமாக இருந்து பெரும்  பாங்காற்றியவர் தேசியத்தலைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தலைவரையே எங்கள் தேசம் இழந்திருக்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts