தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி சாயி சிறுவர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தித் திட்டங்களை என்னால் மேற்கொள்ள முடிந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் ஜனாதிபதியாக வர வேண்டும்.
அவ்வாறான சூழல் வருகின்றபோது தான் தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த விடயங்களை முன்னெடுக்க முடியும் என இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.