தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று(05.06.2024) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் 330,000 ஆக காணப்பட்ட இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது 33,0000 ஆக குறைந்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்று மாணவர் சேர்க்கை குறைவடையும் நிலை காணப்படுகின்றது.
இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகி தனியார் வகுப்புகளுக்கு அதிகம் செல்கின்றனர்.
ஏனெனில் நாட்டின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.