December 9, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு…
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு…

May 27, 2024

இன்று (27) முதல் 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒன்லைன் முறையூடாக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி நுழைவு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதேவேளை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *