Tamil News Channel

Blog Post

Tamil News Channel > சினிமா > தலைக்கன பேச்சு.. விஜய் சேதுபதி மகனை கண்டித்த பிரபலம்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

தலைக்கன பேச்சு.. விஜய் சேதுபதி மகனை கண்டித்த பிரபலம்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

தலைக்கனத்தை மாத்திரம் குறைத்து கொண்டால் நீங்கள் தான் அடுத்த விஜய் சேதுபதி என செய்யாறு பாலு பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பல அவமானங்களை சந்தித்து விஜய் சேதுபதி தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிடைக்கும் பாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன்- சூர்யா முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இவர் நடித்த ஃபீனிக்ஸ் படத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியாகிய நிலையில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்வில் பத்திரிகையாளரிடம் சூர்யா திமிராக நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இந்தச் சூழலில் சினிமாவிற்கு காலடி எடுத்து வைக்கும் சூர்யாவுக்கு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார்.

அதில், “ சினிமாவை பொருத்தவரையில் பல பிரபலங்களின் வாரிசுகள் காணாமல் போயிருக்கிறார்கள்.

உதாரணமாக பிரபுவை நடிகராக்குவதற்கு சிவாஜி கணேசன் கூட பயந்தார். அப்பாவின் பெயரை பயன்படுத்தமாட்டேன் என கூறிய விஜய் சேதுபதியின் மகன் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். ஆனால் டீசர் வெளியீட்டு விழாவுக்கு அப்பாவை அழைத்து வந்தார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட போது, “ தந்தையர் தினம்” என்கிறார். அவரை யாரோ தவறாக வழிநடத்தி வருகிறார்கள். சூர்யா நடித்திருக்கும் ஃபீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி, தேவதர்ஷினி, சம்பத் என பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இவை அனைத்தும் விஜய் சேதுபதி பையன் என்பதால் தான் நடந்தது. எனவே சூர்யா தலைக்கனத்தை மட்டும் ஏற்றிக்கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அடுத்த விஜய் சேதுபதி தான்.” என பேசியுள்ளார்.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் செய்யாறு பாலுவின் கருத்திற்கு ஆதரவளித்து வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *