
தலைமுடிக்கு கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் ஆரோக்கியத்தில் பிரச்சனை வருமா?
கெமிக்கல் ஹேர் டையில் இருக்கும் கெமிக்கல்கள் முடியின் அமைப்பை சேதப்படுத்தும். இது போன்ற தயாரிப்புகளில் காணப்படும் அமோனியா, பொதுவாக முடியின் cuticle ஐ திறந்து டைக்களில் இருக்கும் டை மாலிக்யூல்ஸ்களை ஊடுருவ அனுமதிக்கிறது.
சிலர் தங்களது தோற்றத்தை ஸ்டைலாககவும் தனித்துவமாகவும் காட்டிக்கொள்வதற்காக தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்து கொள்கின்றனர். இதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பின்னர் விளைவுகளை ஏற்படுத்தும்.
கெமிக்கல் அடிப்படையிலான ஹேர் டை-க்கள் என்பவை முடியின் நிறத்தை மாற்றும் சிந்தடிக் காம்பவுண்ட்ஸ்களின் கலவையாகும். இது முடியின் அமைப்பை சேதப்படுத்தும். இதற்கு காரணம் இதில் காணப்படும் அமோனியாவாகும்.
இது முடியின் இயற்கை எண்ணெய்கள் மற்றும் புரதங்களை அகற்றும். இந்த ப்ராசஸ்-ஆனது முடி தண்டு வறண்டு, கரடுமுரடாக மற்றும் உடையக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மேலும் இது முடி உதிர்வை அதிகப்படுத்தி, முடியை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்த கூடும். சிலருக்கு ஹேர் டைக்களில் தலைமுடிக்கு கீழே இருக்கும் சருமத்தை அதாவது ஸ்கால்ப்பை மிகவும் சென்சிட்டிவ் ஆக்கும் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளன.
இவற்றில் இருக்கும் para-phenylenediamine மற்றும் பிற நறுமண அமின்கள் போன்ற கலவைகள் சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்த கூடும். இதனால் உச்சந்தலையில் எரிச்சல் சம்மந்தமான பிரச்சனைகள் வரக்கூடும்.