நவக்கிரகங்களில் நிழல் கிரகம் என அழைக்கப்படுபவர் தான் கேது பகவான். இவர் பின்னோக்கிய பயணத்தில் தான் எப்போதும் இருப்பார். ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பிரியாத கிரகங்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
இந்த கிரகங்கள் வேறு வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களின் செயற்பாடு ஒரே மாதிரியாக தான் இருக்கும். கேது பகவான் பூர நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார்.
இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்த கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை கொடுக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
- கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி வாழ்க்கைக்கு தேவையான நல்ல பலனை கொண்டு வந்து சேர்க்கும்.
- எந்த ஒரு விடயத்தில் நீங்கள் ஆசைப்பட்டாலும் அது இந்த கால கட்டத்தில் நிறைவேறும்.
- பல நாட்கள் ஏதோ ஒரு தேவைக்காக தள்ளிப்போட்ட வேலைகள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.
- நிதி நிலமை இதுவரை மோசமாக இருந்தாலும் இந்த கேது பெயர்ச்சியின் பின்னர் முன்னேற்றத்தை கொடுக்கும்.
கடகம்
- உங்களுக்கு இந்த கேது பெயர்ச்சி 2024 முழுக்க சிறப்பாக அமையும்.
- எந்த விடயத்திலும் உங்களுக்கு நன்மை மட்டுமே வந்து சேரும்.
- உங்களுடன் பிறந்தவர்கள் உங்களுக்காக நன்மைகளை செய்வார்கள்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக கிடைப்பதால் உங்களுக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறலாம்.
- எந்த வேலையை நீங்கள் எடுத்து செய்தாலும் அதில் தோல்வியே இருக்காது.
சிம்மம்
- கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களை வாழ்வில் உயர்த்தி விட போகிறது.
- மாணவர்களாக இருந்தால் நீங்கள் கல்வியில் உச்சத்தில் இருப்பீர்கள்.
- உங்களின் பூர்வீக சொத்துக்கள் உங்களிடம் வந்து சேர அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.