வடக்கு தான்சானியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் டஜன் கணக்கான மக்கள் பலியானதாக தான்சானியா நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்தது 37 பேர் இறந்ததுடன், 30 பேர் காயமடைந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தான்சானியா நாட்டின் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.

கிளிமஞ்சாரோ பகுதியில் உள்ள மோஷி–டாங்கா நெடுஞ்சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் சனிக்கிழமை மாலை இந்த மோதல் நிகழ்ந்ததுள்ளது, மேலும் பலியானவர்களின் அடையாளங்கள் மற்றும் தேசிய இனங்கள் உடனடியாகத் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பை கடுமையாகப் பின்பற்றுமாறு ஜனாதிபதி கூறியதுடன், இதுபோன்ற துயரங்கள் தான்சானிய குடும்பங்களைத் தொடர்ந்து பாதிக்கின்றன என்று கூறினார்.

பல்வேறு பாதுகாப்பு பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், சாலை விபத்துக்களைத் தடுக்க தான்சானியா அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here