February 7, 2026
திங்கட்கிழமை முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்!
Top உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

திங்கட்கிழமை முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்!

Nov 21, 2025

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் டிஜிட்டல் கட்டண முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆரம்ப கட்டமாக, இந்த சேவை மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

முதற்கட்டத்தில் சுமார் 20 முக்கிய போக்குவரத்து மார்க்கங்களில் இந்த டிஜிட்டல் கட்டண வசதி செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, பதுளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் வங்கி அட்டையைப் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும்.

இந்த டிஜிட்டல் முறையால், பயணிகளுக்கு மீதித் தொகை வழங்குவதில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படுவதுடன், கட்டண வசூல் முறையும் நவீனமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *