யாழ் கைதடியில் சமூக மட்ட அமைப்புக்கள் இணைந்து திடலெங்கும் திசைபரப்பிட எனும் தொனிப்பொருளிலான கைதையூர் பெருவிழா நேற்றுமுந்தினம் இரவு வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கைதடி மத்திய விளையாட்டு மைதானத்தில் இப் பெருவிழா விழாக்குழுதலைவர் அ.காந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
முதன்மை நிகழ்வாக கைதடி பிரதேசத்தின் 13 சனசமூக நிலையங்களின் கொடியேற்றபட்டது.
மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,கலைக்குழுக்கள்,முன்பள்ளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கல்வி மேம்பாட்டு விழா ,பண்பாட்டு விழா ,கைதையூரான் விருது வழங்கல் ,பிரதேச விளையாட்டு விழா பரிசளிப்பு விழா போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post Views: 2