ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி வெள்ளத்தில் மூழ்க்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பெய்த திடீர் கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாழ்வான புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், உதவிக்காக 297 அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கும் சிட்னி நகரின் வடமேற்கில் பாரிய வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.