கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதிப் பகுதியை உள்ளடக்கிய இடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட அதிரடி நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரையோரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா வீதியின் போதி மரத்திற்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட போதைப் பொருள்களுடன் 13 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும் அவர்களுள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Post Views: 2