Tamil News Channel

Blog Post

Tamil News Channel > மருத்துவம் > தினமும் சாப்பிடுங்க.. நோய் தாக்காமல் இருப்பதற்கான இயற்கை மருந்துகள் இவைதான்!

தினமும் சாப்பிடுங்க.. நோய் தாக்காமல் இருப்பதற்கான இயற்கை மருந்துகள் இவைதான்!

நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றை சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள்.

ஆனால், மனித உடலை அனைத்து நோயிலிருந்தும் பாதுகாக்க, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனின் உடலிலுள்ள வெள்ளை ரத்த அணுக்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நோயிலிருந்து பாதுகாப்பது, நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நோய்க்கிருமி அழிப்பது போன்ற பல வேலைகளை வெள்ளை ரத்த அணுக்கள் செய்கிறது. நோய்த்தொற்று மீண்டும் வராமல் இருக்க அவை உருவாக்கும் ஆன்டிபாடிகளின்(antibodies) செயல்பாடு அவசியம்.

அத்துடன் தடுப்பூசிகளும் ரத்த அணுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குகின்றது. உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நாம் தினசரி “சமமான விகிதத்தில் உணவு” எடுத்து கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் போதுமான அளவு புரதங்கள் இருப்பதை உறுதி செய்வது கட்டாயமாகும்.

அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் என்னென்ன உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் முதல் இடத்தில் இருக்கின்றது. வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தி உணவின் வளமான மூலமாகும். வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் (WBCs) உற்பத்தியை அதிகரித்து தொற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கிறது. சளி மற்றும் இருமலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்திக்க செய்வது அவசியம்.

மஞ்சள்

“மஞ்சள்” என்பது இந்தியர்களின் அனைத்து விதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வரும் நறுமணம், ஆரோக்கிய பலன்கள் தவிர்க்க முடியாத மசாலாவாக மாறி வருகிறது. மஞ்சளில் அதிக செறிவுகளில் குர்குமின் உள்ளது. இது காவி நிறத்தில் இருப்பதால் உடற்பயிற்சியால் தசைகளுக்கு வரும் சேதத்தை குறைக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருக்கிறது. இது கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு பலன் கொடுக்கிறது.

ப்ரோக்கோலி

பச்சை காய்கறிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ப்ரோக்கோலியில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. இதனால், ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் முக்கியம் பெறுகிறது. அதே சமயம் செரிமானத்திற்கு தேவையான குடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்கிறது.

தயிர்

சிறந்த குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடைய உணவுகளில் தயிரும் ஒன்றாகும். இதில் லாக்டிக் அமிலம் நிறைந்திருப்பதாலும், வைட்டமின் D இன் சிறந்த ஆதாரமாக உள்ளது. எனவே, தயிர் உட்கொள்ளும் பொழுது உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம் சீராக்கப்படுகிறது.

அதே போன்று பல்வேறு நோய்களுக்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை அதிகரிக்கிறது. சாதாரண தயிர் சாப்பிடுவது அதன் அனைத்து நன்மைகளையும் உறுதிச் செய்கிறது. சீதாப்பழம் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ஊட்டசத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.

கீரை

கீரைகள் பொதுவான பச்சை இலைக் காய்கறியாக பார்க்கப்படுகிறது. இதிலுள்ள அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும். வைட்டமின் A, வைட்டமின் சி, வைட்டமின் E, பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் ஆகிய ஊட்டசத்துக்கள் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

பாதாம்

பாதாம் பூரிதமற்ற அல்லது ஆரோக்கியமான கொழுப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வைட்டமின் ஈ. பாதாமில் மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கிறது. அறிவாற்றலை மேம்படுத்த நினைப்பவர்கள் அடிக்கடி பாதாம் சாப்பிடுவது சிறந்தது.

இஞ்சி

ஜலதோஷம் மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் சிறிது நிவாரணம் பெற இஞ்சியை உணவு அல்லது பானத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை புண் அறிகுறிகளை சரிச் செய்கிறது. அழற்சி நோய்த்தொற்றுகளை போக்கும் இஞ்சியால் நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. நாள்ப்பட்ட வலிகளை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சி சாப்பிடலாம்.

பூண்டு

சமைலறையில் தவிர்க்க முடியாமல் இருக்கும் பொருட்களில் ஒன்று தான் பூண்டு. இதுஉணவுகளுக்கு தனித்துவமான சுவை கொடுக்கும். பண்டைய கால மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் பூண்டு, ஜலதோஷத்திற்கான பொதுவான வீட்டு தீர்வாக பார்க்கப்படுகிறது. நோயை எதிர்த்து போராடும் சக்தியை பூண்டு அதிகரிக்கிறது.

பச்சை தேயிலை தேநீர்

க்ரீன் டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஈசிஜிசி ஆகிய இரண்டு வகையான சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அதே போன்று ECGC ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ப்ளாக் டீயைப் போல பதப்படுத்துவதை விட வெந்நீரில் ஊற வைப்பதால் ஊட்டசத்தக்கள் இழக்கப்படுகின்றன.

 கவனிக்க வேண்டியவை

1. உடல்நலம் ஆரோக்கியமாக நீண்ட நாட்களுக்கு வேண்டும் என நினைப்பவர்கள் செம்புக் கோப்பையில் (Copper bottle) தண்ணீர் குடித்து வர வேண்டும்.

2. பிளாஸ்டிக் கொள்கலன்களைப்(plastic containers) பயன்படுத்தி உணவு மற்றும் பானங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் கொண்டு செல்கின்றோம். இதனை முழுமையாக தவிர்க்க பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

3. சைவ உணவு பிரியர்களுக்கு புரதச்சத்து கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஏனெின் புரதத்திலிருந்து கிடைக்கும் சில வைட்டமின்களின் அளவு இயற்கையாகவும், குறைவாகவும் இருக்கும்.

4. வயதானவர்கள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், செரிமான அமைப்பில் பிரச்சனை உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக வைட்டமின் B12 குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

5. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வைட்டமின் B1, ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்களின் தேவை அதிகமாக இருக்கும். அந்த குறைபாடுகளை சரிச் செய்வதற்கு மருந்துவில்லைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

6. குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அவர்களுக்கு உணவில் கொடுப்பது சிறந்தது. காய்கறி, பழங்கள் மூலமாக பெறப்படும் சத்துக்கள் அவர்களின் உடலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

பலன்கள்

  • நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருக்கும் பொழுது தொற்றுகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம். உடலிலுள்ள வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
  • நோயிலிருந்து பாதுகாப்பது, நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நோய்க்கிருமியைக் கொல்வது போன்ற வேலைகள் எந்தவித தாமதமும் இல்லாமல் நடக்கும். அணுக்களின் முக்கிய வேலைகள் சரியாக நடக்கும் பொழுது உடல் மற்றும் மனம் சீராக இயங்கும்.
  • நோய்த்தொற்று மீண்டும் வராமல் இருக்க அவை உருவாக்கும் ஆன்டிபாடிகளின்(antibodies) செயல்பாடு முக்கியமானது. அதே சமயம் தடுப்பூசிகளும் நம் ரத்த அணுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்தில் அதனை பெற்றுக் கொள்ளலாம்.
  • உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நாம் தினசரி “சமமான விகிதத்தில் உணவு” சாப்பிடுவது அவசியம்.நமது உணவில் போதுமான புரதங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *