November 18, 2025
தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு..!
News News Line Top Updates புதிய செய்திகள்

தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு..!

Apr 22, 2024

தியத்தலாவையில் நேற்று  (21)  இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

பந்தயத்தில் பங்குபற்றிய கார் ஒன்று ஓட்டப் பாதையை விட்டு விலகி கடுப்பாட்டை இழந்து பார்வையாளர் பகுதிக்குள் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் மரணித்தவர்களில் போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் 4 பேர் மற்றும் சிறுமி ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து போட்டியின் மீதமுள்ள போட்டிகள் இரத்து செய்யப்படுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *