திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வுவில் மஹாமாயபுர ஸ்ரீ சித்தத்தாராம விஹாரவாசி, வணக்கத்திற்குரிய கமுனுபுர சுமேதானந்த தேரர் அவர்களினால் சொற்பொழிவொன்று மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமை தாங்கியுள்ளார்.
இதற்கமைய இவ்வருட வெசாக் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் தினமானது புத்தர் பெருமானின் பிறப்பு, புத்தர் நிலையை அடைதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதம கணக்காளர் ப. ஜெயபாஸ்கர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.