November 17, 2025
திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி!  -ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் மீட்பு நடவடிக்கை வெற்றி-
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி! -ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் மீட்பு நடவடிக்கை வெற்றி-

Jun 30, 2024

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை,சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் நேற்று  மீட்டு எடுத்துள்ளனர்.

குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *