திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பஸ்ஸர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 36 முதல் 50 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மூன்று வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Post Views: 2