‘மாற்றத்துக்கான தலைமைத்துவம்’என்ற தொனிப் பொருளில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை திருகோணமலையில் பத்தாவது சாரணர் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வ சாரணர் இலச்சினை பிரதம சாரணர் ஆணையாளரிடமிருந்து நாட்டின் முதலாவது சாரணரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.