December 17, 2025
திருகோணமலை கிதுல்வுதுவில் பகுதியில் பேருந்துடன் – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

திருகோணமலை கிதுல்வுதுவில் பகுதியில் பேருந்துடன் – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு!

Nov 13, 2025

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் கிதுல்வுதுவ பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மொரவெவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மொரவெவயிலிருந்து தம்பலகமுவ நோக்கிச் சென்ற பஸ்ஸுடன், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹொரபத்தன, கப்புகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மொரவெவ போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *