July 18, 2025
திறைசேரிக்கு அனுப்பப்பட்ட சீன அரசினால் வழங்கப்பட்ட 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி…!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

திறைசேரிக்கு அனுப்பப்பட்ட சீன அரசினால் வழங்கப்பட்ட 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி…!

Nov 9, 2024

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீன அரசினால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்பட்ட சேதங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளைப் புனரமைப்பதற்காக தேசிய பாதீட்டுத் திணைக்களத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *