பேருந்தும் லொறியும் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திராவின் சின்னகஞ்சம் பகுதியிலிருந்து ஐதரபாத் நோக்கி புறப்பட்ட ஆம்னி பேருந்தொன்று, இன்று அதிகாலை பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டைப் பகுதியில் வைத்து எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது.
தீப் பரவலில் வாகன சாரதி, பயணிகள் என மொத்தமாக 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதோடு, பல பேர் படு காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதோடு, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸார் விசாரித்தபோது பேருந்தில் பயணித்த 42 பேரும் வாக்களித்துவிட்டு வீடு திரும்புகையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.