பண்டாரவளை – ஹல்பே பிரதேசத்தில் இன்று (16) அதிகாலை 12.45 அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த வாகனம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை மாநகர தீயணைப்புத் திணைக்களம், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது அவரது வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன் அமைச்சருக்கோ, சாரதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என எல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அமைச்சர் நேற்று (15) மஹியங்கனை பிரதேசத்தில் இருந்து சென்ற நிலையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.