
தீ விபத்தில் பலர் பலி!
தென்கொரியா சியோல் தலைநகர் ஹ்வாசோங்கில் உள்ள அரிசெல் தொழிற்சாலையில் பல லித்தியம் பட்டரிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது தொழிற்சாலையில் சுமார் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களில் 18 சீன பிரஜைகள், 2 லாவோ பிரஜைகள் மற்றும் இரண்டு தென் கொரிய தொழிலாளர்கள் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் மூவர் தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.