காதல் உறவினால் கை துண்டாடப்பட்ட நிலையில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்றிரவு (23.06) இடம்பெற்றுள்ளது.
காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் தனுஜன் எனும் 18 வயதுடைய இளைஞனின் கை துண்டாடப்பட்டுள்ளது.
காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post Views: 2