துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி
காலி – இக்கடுவை பிரதேசத்தில் நேற்று (02 ) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூவர் முச்சக்கரவண்டி ஒன்றில் கூரிய ஆயுதங்களுடன் வந்து மேற்படி நபரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வைத்து அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
நபரின் தலையையும், இரண்டு கைகளையும், கால் ஒன்றையும் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![]()