துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்!
ஞாயிற்றுக்கிழமை இரவு ஹங்கம, ரன்ன பிரதேசத்தில் உள்ள ஹார்ட்வேர் கடையின் உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ரன்ன, திஸ்ஸ வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கடையின் முதல் மாடியிலிருந்து தரை தளத்திற்குச் செல்லும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()