Tamil News Channel

துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு..!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ மற்றும் களனிமுல்ல பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாடப் புத்தகங்களை இழந்த பாடசாலை மாணவர்களின் அவல நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் வைத்து பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த இரண்டு வாரங்களுக்குள், வெள்ளத்தினால் பாடசாலை பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உதவுவதற்கு அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts