Tamil News Channel

தென் பகுதி மாணவர்கள் வடக்கின் யாழ்பாணத்திற்கு விஜயம்..!

WhatsApp Image 2024-06-29 at 17.48.54_c97dfdfc

இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் தென் பகுதி மாணவர்கள் வடக்கின் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவின் சூரிய கற்கை நிறுவனத்தில் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியினை கற்கும் சிங்கள மாணவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டாம் மொழி கற்கை நிறுவனமான சூரிய கற்கை நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன் பொழுது தமிழ் மரபின் படி குறித்த மாணவர்கள் வட்டுக்கோட்டை இரண்டாம் மொழி நிறுவகத்தில் கல்வி பயிலும் மாணவர்களால் ஆரார்த்தி எடுத்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து விருந்தினர்களது உரை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மதிய போஷன நிகழ்வு இடம்பெற்றதுடன்  பின்னர் மாணவர்களும் விருந்தினர்களும் கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வுகளில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் , திருமதி யசோதை சரவணபவன்,முன்னாள் சபாநாயகரின் சூரிய கற்கை நிறுவனத்தின் இயக்குநர் ஜெயதிலக்க,சூரிய நிறுவி இணைப்பாளரும் மொழிபெயர்பாளருமான தெ.உதயரூபன் ,சூரிய கற்கை நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் பிறேம் ,சூரிய கற்கை நிறுவனத்தின் மாணவர் தலைவரும் கிராம அலுவலருமான றுகுணாஸ் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts