January 20, 2026
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வழக்கில் – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன்னாள் வேட்பாளர் கைது!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வழக்கில் – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன்னாள் வேட்பாளர் கைது!

Nov 21, 2025

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்ததாவது,   குறித்த நபர் பன்னலவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன் தொடர்புடைய கப்பல் பிடிப்பு சம்பவம் நேற்று இடம்பெற்றது.
கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையில் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்டவைகளில் 200 கிலோ கிராம் ஐஸ் (Ice),  100 கிலோ கிராம் ஹெரோயின்,2 வெளிநாட்டு துப்பாக்கிகளும் சம்பவத்துடன் தொடர்பாக ஆறு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கற்பிட்டி, காலி, வென்னப்புவ, நீர்கொழும்பு மற்றும் கந்தர பகுதிகளைச் சேர்ந்தவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புடன் கூடிய மீன்பிடிப் படகு
நேற்று இரவு தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *