தெலுங்கானாவில் பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து- 20 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், பேருந்தொன்றும் டிப்பர் ரக லாரியும் மோதியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
நேரில் கண்ட சாட்சிகளின் தகவலின்படி, டிப்பர் வாகனம் பேருந்துடன் மோதியபோது அதிலிருந்த கற்கள் பேருந்தின் மீது சரிந்ததால், பேருந்து முற்றாக சேதமடைந்தது.
அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தற்போது சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விபத்தின் காரணம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![]()