அரச சொத்துகளுக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளை கடற்கரை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி பேக்ஹோ இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஹோட்டல் சுவரை மீண்டும் அமைத்த 14 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Post Views: 2