மாவனல்லை நகருக்கு அண்மித்த முன்பள்ளியில் வியாழக்கிழமை 03 வயது குழந்தையொன்று தலையில் தேங்காய் விழுந்ததில் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலர் பாடசாலை வளாகத்தில் இருந்த குழந்தை காயமடைந்து மாவனல்லை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.