தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என  பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here